7/10/2013 04:44:00 PM
0
நான் கடுப்பாகி களைத்து விட்டதுதான் இந்தப் பதிவு எழுதுவதற்கான காரணம். இப்படி பதிவு போட்டாலாவது திருந்துவார்களா என்று பார்ப்போம். என்னை அப்படி கடுப்பாக்கிய விஷயம் என்னவென்று நீங்கள் நினைக்கலாம். வேறு என்ன இந்த சமூக வலைத்தளங்களில் பலரது நடவடிக்கைகள் தான்..!


இரண்டு விடயம் கடுப்பாக்கியது

1, போலி கணக்குகளும் நடிகை, நடிகர்களின் படங்களுடன் கூடிய சமூக வலைத்தள கணக்குகளும்.
2, சந்தைப்படுத்தல் என்ற பெயரில் பிழையாகவும், சமூக வலைத்தளங்களின் தனியுரிமைக் கொள்கை, விதிகள் மீறலும் .
முதலில் இந்த போலிக் கணக்குகளுக்கு வருவோம். இது அனேகமாக வேலை இல்லாமல் இருப்பவர்களின் வேலைஒரு காலத்தில் நாங்களும் போலி கணக்குகள் வைத்து  Facebook விளையாட்டுகளுக்கு பயன்படுத்தியது உண்டு. பின்பு சமூக வலைத்தளங்களின் ஆழம் புரிந்தவுடன் அத்தனை கணக்குகளையும் செயலிழக்கச் செய்து விட்டேன். அப்படி என்ன ஆழம் என்று சிந்திக்கக் கூடும். அதனை இன்னொரு பதிவில் முடியுமானால் விளக்க முயற்சிக்கிறேன். மேலோட்டமாகக் கூறுவது என்றால் "சமூக வலைத்தளங்களில் உங்கள் கணக்குகள் என்பது உங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் தான்" இது பொதுவான, மேலோட்டமான கருத்து.

இந்தக் கருத்து ஒவ்வொரு சமூக வலைத்தளங்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசப்படலாம். போலி கணக்குகள் வைத்திருப்பதால் அதனை வைத்திருப்பவர் பல விதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அதில் ஒன்று அந்த கணக்கு யார் உடையது என்பது தெரிய வரும் பட்சத்தில் அவருடைய உண்மையான கணக்கு மேலும் நம்பிக்கை குறைய தொடங்கும். ஆங்கிலத்தில சொல்வது என்றால் (Credibility Loss), மற்றும் இந்த நடிகை, நடிகர்களின் படங்களைப் போடுபவர்கள் பற்றி ஏனையவர்கள் இப்படியும் யோசிக்கலாம், “நீயே நடிகையின் படம் தான் போட்டு இருக்கிறாய். பிறகு என்ன எங்களுக்கு கருத்து" என்று. ஏன் என்றால் என்னைத் தெரிந்தவர்கள் தான் என் Facebook கணக்கில் இருக்கிறார்கள். இந்த தனிப்பட்ட கணக்குகளில் கட்டாயமாக உங்கள் முகம் தெளிவாக தெரியும் வண்ணம் படங்கள் போட வேண்டும். அது எந்த  சமூக வலைத்தளங்களாக இருந்தாலும் சரி. ஏன் எண்றால் உங்களை அடையாளம் காண்பதற்காக. இந்தத் தனிப்பட்ட கணக்குகளை எவ்வாறு பேணுவது என்பது பற்றி தெளிவாக ஒரு பதிவு வெகு விரைவில் ஆங்கிலத்தில் இடுகிறேன். இந்த மாதிரி படங்களும் போடுபவர்களும் போலியான கணக்குளில் சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களும் என்னை உண்மையாகக் கடுப்பாக்குகிறார்கள்.

அடுத்து வருவோம் என்னைப் போன்ற இணைய சந்தைப்படுத்தலில் இருப்போருக்கு ஓர் ஆரோக்கியம் இல்லாத எதிர்காலத்தை கொண்டு வருகின்றன சில தமிழ் ஊடகங்கள். சில ஊடகங்களில் வேலை செய்வோர், நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) செய்யும் நிறுவனங்கள். (மன்னிக்க வேண்டும் நான் எந்த நிறுவனத்துக்கும் பயம் இல்லை, பயம் இல்லாது பெயரை வெளியிடுவேன். (முதல் பதிவு ஏன் சும்மா....) இந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் அப்படி என்ன ஆரோக்கியம் இல்லாத சந்தைப்படுத்தல் செய்கிறார்கள் என்று பார்ப்போம். சில திரைப்படங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை சில மேலாண்மை நிறுவனங்கள் வழங்கின. இவர்கள் என்ன போட்டி வைத்தார்கள் தெரியுமா? ஒரு படத்தைப் போட்டு அதை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு (Share) கூறுகிறார்கள். யார் கூடுதல் Like பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்படும். கடைசியாக அதில் பகிர்ந்த ஓரிருவருக்கு கிடைக்கும். மிகுதி என்ன அந்த நிறுவனத்துடன் நட்பில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் (அப்படி கிடைச்ச நுழைவு சீட்டில் நானும் படம் பார்த்து இருக்கிறேன்). இதில் என்ன பிழை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். முதலாவது பிழை என்ன தெரியுமா? இலங்கையில் போட்டிகள் வைத்து பரிசில் வழங்குவது எண்றால், பரிசில் தொகை 2000 ரூபாவுக்கு மேலாக இருந்தால் இலங்கை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்தல் வேண்டும். உங்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் எழலாம். என்ன 350 நுழைவுச்சீட்டு தானே என்று, அவ்வாறு அல்ல மொத்தமாக 10 நுழைவுச்சீட்டுகள் வழங்கினால் அது தான் கணக்கில் எடுக்கப்படும். சரி இது தான் போகட்டும் என்றால் alertஇல் நினைத்தமாதிரி டெக் (Tag) செய்வது பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். முதலாவது இது  Facebook சந்தைப்படுத்தல் விதிகளை மீறியது. அதை விட கோபப்படுத்தும் விஷயம் அதில ஊர்ல போற, வாறவன் இல இருந்து கொமண்ட், லைக் போடும், டெக் பண்ணினவன் எல்லாருக்கும் alert போகும் அதில் நானும் ஒருத்தன் என்றால் கடுப்பாகும் பாருங்கோ...  Facebookசந்தைப்படுத்தல் விதிகளைபடிக்க அழுத்தவும்.


சரி அடுத்து வருவோம் இந்த தமிழ் ஊடகங்களும் அதில் வேலை செய்வோரும் கடுப்பாக்கும் விடயங்கள். சில தமிழ் ஊடகங்கள் மட்டும் தான் சிறப்பாக இயங்குகின்றன. அதுவும் அதில் வேலை பார்ப்போரால் தான். இதைப் பற்றிய அறிவு அந்த ஊடகங்களின் தலைவர்களுக்கும் இல்லை, மேம்படுத்துபவர்களுக்கும் இல்லை. இதனுடைய பாதிப்பு ஒரு சில வருடங்களில் தெரியும். சில ஊடகங்களுக்கு இப்போதே தெரியத் தொடங்கி இருக்கிறது. சரி என்ன தான் இவர்கள் செய்கிறார்கள்? அனேகமானவர்கள் ஊடகப்பெயரை தங்கள் முதல் பெயராக சமூக வலைத்தள கணக்குகளுக்கு வைப்பது (பச்சையா கேட்கிறது என்டா அப்பா பெயர் தெரியாதா?) அடுத்து நிறுவனத்தை, நிறுவன வியாபார குறியை விளம்பர படுத்துவதை விட தங்களைத் தான் கூடுதலாக விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், “இந்த நிறுவனத்தில் நான் வேலை செய்தேன்என்று ஒரு நாளும் சொல்லிப் பெயர் எடுக்க வேண்டாம். நான் வேலை செய்வதால் அந்த நிறுவனம் பத்துப் பேருக்கு தெரியவரும் மாதிரி நடந்து கொள்ளுங்கள். நான் கடந்த 4,5 கிழமைகள் பார்த்து வருகிறேன். அனேகமான தமிழ் ஊடக Facebook பக்கங்கள் முழுவதும் தனிப்பட்ட விளம்பரமாவே இருக்கிறது. இதில் என்ன தான் பலன் வரப்போகிறது? நாளைக்கு அந்த நபர் நிறுவனத்தை விட்டுப்போனால் என்ன நடக்கும்? இதை அந்த நிறுவனத்தின் தலைவரோ, மேலதிகாரிகளோ கவனிப்பதில்லை. இது பாரதூரமான விளைவைக் கொண்டுவரும். உதரணம் தரலாம் ஆனால் தரவில்லை. (ஏதாவது ஊடகப்பெயரை உபயோகிக்க வேண்டும்.) மற்றும் சில ஊடகங்களில் தங்கள் வியாபரக்குறி Facebook பக்கங்கள் இருக்கும். அங்கு செய்தியோ, விபரமோ பகிர மாட்டார்கள் தங்கள் சொந்த கணக்குகளில் தான் பகிர்வார்கள். இதில் என்ன பயன்?

இவ்வாறு நிறைய விடயங்களைக் கூறிக் கொண்டே போகலாம். என்னை கடுப்பாக்கும் விடயங்கள், இந்தப் பதிவை எழுதக் காரணமும் கூட. விடியற்காலையில் கடுப்பாக்கின லோஷன் அண்ணா தான். நான் அனுப்பிய SMS வாசிக்கவில்லை சிறியதாக அனுப்பினேன். "SMஇல் பிழையாக சந்தைபடுத்தல் செய்பவர்களைக் கண்டால் சட்டென்று கோபம் வரும்" அதைப் பதிவாக போட வைத்து விட்டார்.

சில ஊடக நண்பர்கள் நான் சொல்லும் கருத்துக்களை கேட்டு திருத்திக் கொள்கிறார்கள். அப்படி பெயர் குறிப்பிடாமல் கருத்தை மட்டும் சொல்லுகின்றேன். முடியும் என்றால் கண்டு பிடியுங்கள் "நீங்க எழுதின செய்தி என்று ஒரு நாளும் உங்கள் Wall இல் பகிர வேண்டாம். அப்படி பகிர விரும்பினால் உங்களுடைய Blog இல் பதிவேற்றிவிட்டு பிறகு உங்கள் சொந்த கணக்குகளில் பகிருங்கள். ஒரு நாளும் நிறுவனத்தை வைத்து உங்கள் திறமையை வெளிக்காட்ட வேண்டாம்"

இது என்னுடைய முதல் தமிழ்ப் பதிவு. யாரும் கடித்துக் குதற வேண்டாம். நல்ல Comments போடுங்க.

0 comments:

Post a Comment